Saturday, March 12, 2011

ஜீவ விவசாய முறைகள்:

பாரதத்தில் பல்வேறு ஜீவ விவசாய முறைகள் உள்ளன. இவற்றைப்பற்றிய ஒரு அறிமுகம்:

1. ரிஷி விவசாயம் (Natural Farming or Zero Farming or Rishi Krishi):

 ரிஷிகளும் மனுவின் மனு நீதியும் மண்ணை உழாமல், மருந்துகள், உரங்கள் இடாமல் செய்யும் விவசாயமே சிறந்தது என்கின்றனர். இதனையே ஜப்பான் விவசாய ஞானி மசநோபு புகுவோகா தனது 'ஒற்றை வைக்கோல் புரட்சி; எனும் புத்தகத்தில் விவரித்துள்ளார். இதனால் செலவும் இல்லை, துன்பங்களும் இல்லை. விவசாய உற்பத்தி வருடந்தோறும் உயரும். கொள்ளேகாலம் தொட்டிந்துவாடி கைலாசமூர்த்தி இதனை சீரிய முறையில் செய்து வருகிறார். நாட்டு வித்துக்கள், இனங்களைப் பயன்படுத்துவது நலம்.

http://en.wikipedia.org/wiki/Masanobu_Fukuoka
http://en.wikipedia.org/wiki/Natural_farming
http://www.the-anf.org/
http://www.krishivatika.com/rkf.html

2.ஜீரோ பட்ஜெட் விவசாயம் (Zero Budget Farming):

 மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை நாட்டு மாட்டின் ஐந்து பொருட்களை வைத்து பெருக்கி அதன்மூலம் விவசாயம் செய்தல்.
1. அமிர்தக்கரைசல் (Amruta jalam) - தபோல்கர்
2. அமிர்த மண் (Amruta mitti) - தபோல்கர்
3. அக்கினி அஸ்திரம் (Agniastram) - சுபாஷ் பாளேகர்
4. பிரம்மாஸ்திரம் (Brahmastram) - சுபாஷ் பாளேகர்
5. வேம்பு அஸ்திரம் (Neemastram) - சுபாஷ் பாளேகர்
மேலும் மூடாக்கு போன்ற பல சுதேச தத்துவங்களைக்கொண்டு வகுக்கப்பட்ட முறை. இன்று சுபாஷ் பாளேகர் பிரபலப்படுத்திவருகிறார். அந்தந்தப்பகுதி நாட்டு வித்துக்கள், இனங்களை மட்டுமே பயன்படுத்துதல் கட்டாயம்.

http://www.prayogpariwar.net/
http://palekarzerobudgetnaturalfarming.com/aboutme.html

3. பஞ்சாங்க விவசாயம் (Biodynamic farming):

நவகிரகங்களின் ஈர்ப்பு (கிரஹிப்பு = கிரகம்) விசையாலேயே அனைத்து உயிரி வினைகளும் நிகழ்கின்றன. இதனை ஆஸ்திரிய நாட்டு ரூடோல்ஃப் ஸ்டைனர் (Rudolph Steiner)  பாரதம் வந்து வேதம், விருக்ஷாயுர்வேதம் போன்றவற்றைக் கண்டறிந்து உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியுள்ளார். கொங்கத்தில் மேட்டுப்பாளையம் நவநீதகிருஷ்ணன் முன்னோடி. இதன் முக்கிய முறைகள்: 1. பஞ்சாங்க விவசாயம்
2. கொம்பு சாண உரம்
3. கொம்பு சிலிக்கா உரம்
4. பசுஞ்சாணத்தொழுவுரம்
போன்ற பல சுதேச தத்துவங்கள் கலந்ததே இம்முறை.

http://www.biodynamics.in/
http://aais.in/

TNAU வின்: 
http://agritech.tnau.ac.in/ta/itk/almanac_types_ta.html

4. இயற்கை விவசாயம்:

 முன்னோடிகளான புரொபசர் ரிச்சாரியா, நம்மாழ்வார், கொடுமுடி பஞ்சகவ்ய சித்தர் டாக்டர் நடராஜன் ஆகிய பலரும் பல்வேறு முறைகளில் செய்து வருகின்றனர். வேதம், விருக்ஷாயுர்வேதம் ஆகிய பண்டைய தத்துவங்களைக்கொண்டு பஞ்சகவ்யம், குணபம் (மீன் கரைசல், முட்டை கரைசல்) ஆகிய முறைகள் கொண்டு நாட்டுமாடு வைத்து செய்தல் இம்முறை.

http://www.hindu.com/seta/2009/06/04/stories/2009060450161300.htm

5. ஓம (ஹோம) விவசாயம்:

அக்கினிஹோத்திரம், ஹோமங்கள் ஆகிவற்றின்மூலம் நாட்டுமாட்டின் துணைகொண்டு செய்தல்.

http://www.satavic.org/
http://www.satavic.org/homafarming.htm

6. ஆர்கானிக் அக்ரிகல்சர்:

 இது சற்று அன்னிய முறை. மண்புழு உரம், மண்புழு வடிநீர், ஆலை கம்போஸ்ட், பீட் கம்போஸ்ட் என பல முறைகள் உள்ளதால் சிறிது செலவும் உண்டு. ஆயினும் வணிக உற்பத்தி (Agrobusiness) யுக்தியாக Namesake செய்பவர்கள் செய்யலாம். வெள்ளையர்களைப் போன்றே இது ஒரு சனாதனமற்ற முறை (unsustainable).
விவசாயிகள் தங்கள் மண்ணிற்கேற்ப அப்பகுதி நாட்டுமாடு, நாட்டுவித்துக்கள் கொண்டு இம்முறைகளைக் கண்டு, கேட்டு, உணர்ந்து கலந்து தங்கள் பகுதிக்குத்தக்கவாறு செய்யலாம்.